தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..!

share on:
Classic

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் 5-ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் 71.51 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். அடுத்தக்கட்டமாக மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அதிமுக, திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் நிறைவுக்கு பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் எண்ணப்பட உள்ளன. இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

News Counter: 
100
Loading...

Ragavan