கைவிடப்பட்டது 'வர்மா' திரைப்படம்... அதிர்ச்சியில் கோலிவுட்

share on:
Classic

படத்தின் அவுட்புட் திருப்தி அளிக்காத காரணத்தினால் ’வர்மா’ திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

தெலுங்கில் மெகா ஹிட் ஆன திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்த இயக்குனர் பாலா அந்த படத்தில் சியான் விக்ரமின் மகன் துருவை கதாநாயகனாக களமிறக்கினார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது. ’வர்மா’ என தலைப்பிடப்பட்டிருந்த அந்த படம் விரைவில் திரைக்கு வரும் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போது அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்துள்ளது.

’வர்மா’ திரைப்படத்தை கைவிடுவதாக படத்தின் தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து ’E4 எண்ட்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலறிக்கையில், இப்போது எடுக்கப்பட்டுள்ள தமிழ் வெர்ஷனில் திருப்தி இல்லை என்றும், ஒரிஜினல் அர்ஜுன் ரெட்டிக்கும் இப்போது எடுக்கப்பட்டுள்ளதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளதாகவும், வர்மா படம் வேறு வெர்ஷனில் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தை கைவிடுவதற்கு ஃபைனல் வெர்ஷன் அவுட்புட் சரி இல்லாதது மட்டும் தான் ஒரே காரணம் என்றும், வேறு எந்த பிரச்சனையும் இல்லை எனவும், ஒரிஜினல் படம் ரசிகர்களுக்கு எந்தளவு ஃபீலிங்ஸ் கொடுத்ததோ அதே அளவு ஃபீலிங்ஸை கொடுக்கும் விதமாக புதிய வெர்ஷன் இருக்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. 

மேலும், துருவை தவிர்த்து புதிய வெர்ஷனில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், புதிய வெர்ஷன் படத்தை எடுத்து முடித்தவுடன் அதனை வரும் ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும், ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறும் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

E4 எண்ட்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இந்த துணிச்சலான முடிவால் இயக்குனர் பாலா மட்டுமின்றி நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் உட்பட படக்குழுவினர் அனைவரும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே, இயக்குனர் பாலாவுடன் ஏற்பட்ட வார்த்தை மோதல் காரணமாகவே இப்படம் கைவிடப்பட்டிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar