மிக வேகமாக அதிகரிக்கும் கடல் வெப்பமயமாதல் : ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்கள்

share on:
Classic

உலக வெப்பமயமாதல் அதிகமாகி வருவதால், கடல்கள் முன்பை விட அதிக வெப்பமடைவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மதிப்பிட்டதை விட அதிக வெப்பமாகும் கடல்:

கடல்கள்  முன்பை விட அதிக வெப்பமாகி வருவதாக ஜர்னல் சயின்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1960-களில் இருந்து தொடர்ச்சியாக கடல்களின் வெப்பம் அதிகமாகி கொண்டே வருகிறது. உலக வெப்பமயமாதல் காரணமாக 2014-ஆம் ஆண்டு ஐநா கடல்களின் வெப்பநிலையை கண்காணிக்க தொடங்கியது. 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டதை விட மிக வேகமாக கடல்கள் வெப்பமாகிறது என்ற அதிர்ச்சி தகவலை ஜர்னல் சயின்ஸின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
 

 

2018 அதிக வெப்பமான ஆண்டு:

அதிநவீன தொழிநுட்பத்தைக் கொண்டு கடல்களை கண்காணிக்க தொடங்கினர் ஆராய்ச்சியாளர்கள். “ஆர்கோ”என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சர்வதேச நிறுவனத்தின்    3,000-க்கும் மேற்பட்ட மிதவைகள் கடல்களின் வெப்பநிலையையும், உப்புத்தன்மையையும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்தன. ஆராய்ச்சியாளர்கள் இந்த அளவீடுகளை பழைய தகவல்கள் மற்றும் ஆய்வுகளோடு ஒப்பீடு செய்தனர். 2018-ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

 

கடல் அதிக வெப்பமாவதால் ஏற்படும் மாற்றங்கள்:

கடல் அதிகமாக வெப்பமாவதால், கடலின் நீர் மட்டத்தை அது அதிகரிக்க செய்வதோடு மட்டுமல்லாமல் அபாயகரமான கடல் வெள்ளங்களையும் அது ஏற்படுத்தும். கடல் வெப்பமாவது தொடர்ந்தால் கடல் பனிக்கட்டிகள் உருக ஆரம்பிக்கும். மேலும் ஆர்டிக் பகுதியின் குளிர்ந்த காற்று தெற்கே நகர்வதால் பெங்குயின், போலார் கரடி போன்ற பனி வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். கடல் வெப்பமாதல் மழைப்பொழிவு அதிகரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் வலிமையான, நீண்ட நாட்கள் நிலைத்திருக்கக்கூடிய புயல்களும், சூறாவளிகளும் ஏற்படும். இதேபோல் கடந்த நவம்பரில் அமெரிக்க அரசு  தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக இந்த நூற்றாண்டின் முடிவில் ஆயிரக்கணக்கான உயிர்களையும், நூற்றூக்கணக்கான பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

News Counter: 
100
Loading...

aravind