விரைவில் அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை: உடுமலை ராதாகிருஷ்ணன்

share on:
Classic

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்று உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் அரசு கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. எனவே அங்கு அரசு கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

aravind