"திராவிட கொள்கைக்கும் ஸ்டாலின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி"

share on:
Classic

மக்களவை தேர்தல் வெற்றி தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களை கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் என்று கனிமொழி கூறியுள்ளார். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவின் வெற்றி திராவிட கொள்கைக்கும், கருணாநிதியின் கொள்ளைகைக்கும், ஸ்டாலினின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்று கூறினார்.

பின்னர்,  திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அங்கு, செய்தியாளர்களை சந்தித்த அவர் தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பேன் என்று கூறினார். தேர்தல் வெற்றியை பகிர்ந்து கொள்ள கருணாநிதி இல்லாததது வலி தருவதாகவும் தெரிவித்தார். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மக்கள் வேறுவகை சிந்தனைகளை சார்ந்தவர்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டுவதாக கனிமொழி கூறினார்

News Counter: 
100
Loading...

aravind