பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று திருமாவளவன் அறிவிப்பு : பாமகவிற்கு அழைப்பு விடுத்த அதிமுக

share on:
Classic

பாட்டளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியில் நிச்சயம் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பாஜகவிற்கு தங்கள் அதரவு இல்லை எனவும், பாமக இருக்கும் கூட்டணியில் தங்கள் கட்சி நிச்சயமாக இருக்காது என்றும் உறுதியாக தெரிவித்தார். மேலும் தர்மபுரி இளவரசன் இறந்த சம்பவத்திற்கு பிறகு தன்னையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் பாமகவினர் அவதூறாக பேசியதாக தெரிவித்தார். திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவித்த அவர் இறுதியில் பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெறும் எனவும் கூறினார். மேலும் கடந்த முறை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த போது அவருடன் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என்றும், பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது திமுகவிற்கே சாதகமாக அமையும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

இதனிடையே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் திமுக, அமமுக தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என்று தெரிவித்துள்ளார். பாமக கூட்டணி குறித்து அவரிடம் கேட்ட போது பாமகவிற்கு வருக வருக என்று அழைப்பு விடுத்திருக்கிறார். அதிமுக பாமக கூட்டணி ஏற்கனவே உறுதியாகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக பாமகவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya