நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் மனுதாக்கல்

share on:
Classic

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்திய வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று ஏற்கெனவே லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து அவரை நாடு கடத்த அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை இங்கிலாந்து நீதிமன்றத்தில்  விஜய் மல்லையா தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விஜய் மல்லையா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவிற்கு தன்னை நாடு கடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind