விஜய் சேதுபதி புதிய பட டைட்டில் "க/பெ. ரணசிங்கம்"..!!

share on:
Classic

விஜய் சேதுபதியின் புதிய பட டைட்டில் "க/பெ. ரணசிங்கம்" என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட மற்றும் சூப்பர் டீலக்ஸ். சிந்துபாத், சங்க தமிழன், லாபம், மாமனிதன், சேய் ரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது, இந்த நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி இருக்கின்றார் விஜய் சேதுபதி. 

க/பெ. ரணசிங்கம் என டைட்டில் வைத்து இருக்கின்ற இந்த படத்தை ஐரா படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடிஸ் நிறுவனம் தயாரிக்க விருமாண்டி இயக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார்.  ஜிப்ரான் இசையமைக்க வைரமுத்து வரிகளுக்கு சுதர்ஷன் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார், மேலும் பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியுள்ளது.       

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan