மீண்டும் ஜெய்க்குமா ரம்மி ஜோடி...?

share on:
Classic

பூஜையுடன் தொடங்கிய விஜய் சேதுபதி நடிக்கும் க/பெ. ரணசிங்கம் படம்

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு க/பெ. ரணசிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவுள்ளனர். இன்று பூஜையுடன் தொடங்கியுள்ள படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Padhmanaban