ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தளபதி....?

share on:
Classic

மீண்டும் தனது சொந்த குரலில் பாடும் தளபதி

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது ”பிகில்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு பிறகு ஷங்கர் படத்தில் நடிக்க விஜய் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா விஜய் படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் இது படத்தின் இசை வெளியீடு, சிங்கிள் வெளியீடு, டீஸர், டிரெய்லர் என எதுவும் இல்லை என்றும், அதை விட முக்கியமான விஜய் பற்றிய மகிழ்ச்சியான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிகில் படத்தில் ARR இசையில் விஜய் ஒரு பாடல் பாட இருப்பதாக அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விஜய், அட்லி, ARR, பாடலாசிரியர் விவேக் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தளபதி மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு பாட இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Padhmanaban