இன்று முதல் பேங்க் ஆப் பரோடாவுடன் தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு..!

share on:
Classic

பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா, விஜயா ஆகிய வங்கிகள் இன்று இணைக்கப்படுகின்றன.

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இன்று முதல் பேங்க் ஆப் பரோவுடன் இணைக்கப்படுகின்றன. இந்த வங்கிகள் இணைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. கூடுதல் செலவினத்தை எதிர்கொள்வதற்காக பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ. 5,042 கோடி மூலதனமாக வழங்க கடந்த வாரம் மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இன்று முதல் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியன பேங்க் பரோடாவின் கிளைகளாக செயல்படும் என்றும், இனி இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பேங்க் ஆப் பரோடாவின் வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

News Counter: 
100
Loading...

Ragavan