ஜெயலலிதா மரண வழக்கு : விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை

share on:
Classic

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகவில்லை. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகும்படி ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. ஏற்கெனவே, 2 முறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாதது  குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind