தேமுதிக சார்பு வேட்பாளர்கள் நேர்காணல் எப்போது..?

share on:
Classic

தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நாளை மறுநாள் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட 500-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மார்ச் 13-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில், காலை 10 மணிக்கு தொடங்கி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan