விஜய் ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தயாரிப்பாளர்....?

share on:
Classic

ஷங்கர், விஜய் இணையும் முதல்வன்-2 படம் பற்றிய தகவலாக இருக்கலாம்

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது ”பிகில்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு பிறகு ஷங்கர் படத்தில் நடிக்க விஜய் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா விஜய் படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் இது படத்தின் இசை வெளியீடு, சிங்கிள் வெளியீடு, டீஸர், டிரெய்லர் என எதுவும் இல்லை என்றும், அதை விட முக்கியமான விஜய் பற்றிய மகிழ்ச்சியான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இது விஜய்யின் அடுத்த பட தகவலாக இருக்கும் என்றும், அது இயக்குநர் ஷங்கர், விஜய் இணையும் ”முதல்வன் 2” படம் பற்றிய தகவலாக இருக்கலாம் என்று செல்லப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Padhmanaban