ஒரே நாளில் இயக்குனர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ்..!!

share on:
Classic

தமிழ் சினிமாவிற்கு கிரீடம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ. எல் விஜய்.

இவர் இயக்கிய லட்சுமி படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக 'வாட்ச்மேன்' என்ற படத்தை இயக்கத் தொடங்கிருந்தார்.   ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த வாட்ச்மேன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து கூடிய விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

வாட்ச்மேன் படத்தின் ரிலீஸ் தாமதமானதால், இயக்குனர் ஏ. எல் விஜய் அடுத்ததா தேவி 2 படத்தை இயக்க ஆரம்பித்திருந்தார். இந்த படத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். தேவி 2 படத்தின் படப்பிடிப்பு ஒரே செட்யூள் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலை நடந்து வருகிறது.

இந்த  இரண்டு படங்களும் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வெளியானதால்  இயக்குநர் விஜய் இயக்கி முடித்துள்ள 2 படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan