'96' பட இயக்குனருக்கு, விஜய்சேதுபதி கொடுத்த இன்ப அதிர்ச்சி

share on:
Classic

விஜய்சேதுபதி ,திரிஷா நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன '96' படத்தின் இயக்குனருக்கு விஜய் சேதுபதி பைக் ஒன்றை அன்பு பரிசாக வழங்கியுள்ளார்.

கடந்த வருடம் ரிலீசான '96' படம் அனைத்து ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து சென்றது. படம் முழுக்க வந்த விஜய்சேதுபதி, திரிஷா இருவரின் நடிப்பும் வேகுவாக பாராட்டப்பட்டது . குறிப்பாக 'விண்ணை தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு திரிஷாவை இப்படி பார்க்கிறோம் என்று ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்தின் இசையும், பாடல்களும் கூட படத்திற்கு பலம் சேர்த்தது. 

இந்த படத்தை அறிமுக இயக்குனர் 'பிரேம் குமார்' இயக்கி இருந்தார். இதற்கு முன்பு இவர் 'பசங்க', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளாராக வேலை செய்திருக்கிறார். பள்ளி காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் 100 நாட்கள் ஓடி தீர்த்தது. சமீபத்தில் கூட இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா நடந்தது. 

தற்போது விஜய் சேதுபதி செய்திருப்பது தான் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆம் அந்த படத்தின் இயக்குனர் பிரேம் குமாருக்கு ராயல் என்பீல்ட் பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.படத்தின் நியாபகமாக '0096' நம்பர் பிளேட் கொண்ட பைக்கை பரிசளித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். பாசம் காட்டுவதில் தமிழ் சினிமாவில் தனக்கென்றே தனி வழிகளை வைத்திருக்கும் விஜய் சேதுப்பதி அடிகடி நம்மை ஆச்சரியபடுத்த தவறுவதில்லை.    

News Counter: 
100
Loading...

youtube