கமல்ஹாசனுக்கு டஃப் கொடுக்க உள்ள விக்ரம்..!

share on:
Classic

அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் விக்ரம் 25 தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார், இது அவருக்கு 58ஆவது படமாகும். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இதில் விக்ரம் 25 வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சினிமா வரலாற்றில் ஒரே படத்தில் அதிக வேடத்தில் நடித்த நடிகர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Saravanan