‘கடாரம் கொண்டான்’ படத்தில் ஒரு பாடலை பாடிய நடிகர் விக்ரம்..!!

share on:
Classic

'கடாரம் கொண்டான்' படத்தில் நடிகர் விக்ரம் ஒரு பாடல் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா தற்போது, விக்ரமை வைத்து ‘கடாரம் கொண்டான்' படத்தை இயக்கி வருகிறார். ‘பாயிண்ட் பிளாக்’ என்கிற பிரெஞ்ச் படத்தை தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படம் பற்றிய ஒரு முக்கிய அப்டேட் ஒன்றைத் வெளியிட்டுள்ளார். அதாவது, இதில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் விக்ரம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறாராம்.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில்  இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். "கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் சார் பாடிய பாடல் ஒன்றை ரெக்கார்ட் செய்து விட்டேன். அந்தப் பாடல் புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார். ஜிப்ரானின் இந்தப் பதிவால், விக்ரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan