விக்ரம்-க்கு U/A சான்றிதழ்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

share on:
Classic

கடாரம் கொண்டான் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிச்சிருக்கும் படம் தான் கடாரம் கொண்டான். இந்தப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் தயாரிச்சுருக்காரு. மேலும் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிச்சிருக்காங்க, ஜிப்ரான் இசையமைக்கிறாரு. சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கடாரம் கொண்டான் படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருப்பதால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் தகவல் இப்போ வெளியாகி உள்ளது.  கடாரம் கொண்டான் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் குடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Padhmanaban