ஒரு குடம் ஊற்று தண்ணீருக்கு மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம்..!

share on:
Classic

நீர் ஆதாரங்களான ஏரி, குளம் வற்றிப்போக புதுக்கோட்டை அருகே 4 மணி நேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்து வரும் கிராமத்தினர் குறித்த ஒரு தொகுப்பு..

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு... நீர் இல்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆனால், மக்கள் தொகை அதிகரிப்பாலும், வளர்ச்சியினாலும் நீர் ஆதாரங்களான ஏரி, குளம், ஆறு உள்ளிட்டவற்றை நாம் இழந்து வருகிறோம். அதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது தான் புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.புதுப்பட்டினம் கிராமம். 

கடற்கரையில் இருந்து சுமார் இரண்டு  கிலோர் மீட்டர் தொலைவில் உள்ளது தான் வெள்ளைக்காரன் மடை பகுதி. ஆற்றுபடுகையான இந்த பகுதியில் காலி குடங்களுடன் வரும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அகப்பை மூலம் ஊற்றுநீரை சேமிக்கின்றனர்.

வறட்சி காரணமாக ஊற்றுவரும் வரை மணி கணக்கில் கொளுத்தும் வெளியிலில் காத்திருந்தால் தான் ஒருகுடம் நீர் எடுக்க முடியும்.  விலை கொடுத்து வாங்கும் நீரை விட இந்த நீரால், உடல் உபாதை ஏற்படுவதில்லை என்கின்றனர், இப்பகுதி மக்கள். இரவு நேரங்களில் தண்ணீர் எடுக்க வருவதால் பாதுகாப்பு நலன் கருதி மின்விளக்கு அமைக்க வேண்டுமெனவும், ஆற்று பாலத்தை சீரமைக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டு செல்லக்கூடிய மிகப்பெரிய சொத்து நீர்வளம்... வரும் தலைமுறையினர் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமான நீர் நிலைகளை பாதுகாப்போம்…

 

News Counter: 
100
Loading...

aravind