நெஞ்சு எரிச்சலா...புளித்த ஏப்பமா...? இதோ வில்வ இலை மருத்துவம்...!

share on:
Classic

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சந்திக்க நேரிடுகிறது. நெஞ்சு எரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம் ஆகிய பிரச்சனைகளில் அவதிப்படுவோர்க்கு வில்வ இலை சிறந்த மருந்தாகும். 

திடமான உணவுப் பெருட்களை சாப்பிடும் போது உணவுப்பாதையில் ஏதோ இருப்பது போலவும், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சிலர் உணர்வர். உண்ட உணவு சரியான நேரத்திற்கு செரிமானம் ஆகாமல் வியிற்றிலேயே அதிக நேரம் இருப்பதால் வயிற்றுப்புண், குடற்ப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் உடல் தனது சராசரி வெப்பநிலையை விட அதிகமாகிறது.

இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 அல்லது 5 வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் வெப்பநிலை சமநிலை அடையும். மேலும் உணவு செரிமானம் அடைந்து நெஞ்சு எரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனைகள் தீரும். இது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் காரமான உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.
 

News Counter: 
100
Loading...

aravind