நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

share on:
Classic

விருதுநகர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே முத்துராமன் பட்டியை சேர்ந்த சோழைமுருகன் என்பவர் தனது மருமகன்களான ஹரிஹரன், ஆதிகேசவன் ஆகிய இருவரையும் அழைத்து கொண்டு குல்லூர்சந்தை நீர்த்தேக்க அணைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழம் அதிகம் உள்ள பகுதியில் குளிக்க சென்ற போது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் நீண்ட நேரமாக போராடி 3 பேரின் உடல்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan