விருதுநகர் : தேர்தல் ஆணைய நடவடிக்கையால், இந்து அமைப்பினர் கண்டனம்..!

share on:
Classic

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகப் பகுதியில் பெயின்டால் வரையப்பட்டுள்ள பூக்கள் போன்ற ஓவியங்களை கட்சி சின்னம் என கூறி அழித்ததற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைணவ தலங்களில் மிகவும் முக்கியமானதாக விளங்க கூடியது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். இந்த கோவிலில் புராணங்களை விளக்க கூடிய ஓவியங்கள் மற்றும் பல்வேறு வகையிலான பூக்கள் கோவில் நுழைவு வாயில் மற்றும் கோவிலில் பல்வேறு பகுதிகளில் வரையபட்டுள்ளன. இந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் கோவிலில் வரையபட்டு இருந்த பூக்களை கட்சி சின்னம் என்றுக் கூறி அதனை சுண்ணாம்பு கலவை கொண்டு அழித்துள்ளனர். இதற்கு பக்தர்களும் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan