ரஜினிகாந்த்தின் 2-வது மருமகன்...! யார் இந்த விசாகன்...?

share on:
Classic

தொழிலதிபர் அஷ்வின் ராம்குமாருடனான சௌந்தர்யாவின் திருமண வாழ்க்கை கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்துடன் முடிவிற்கு வந்தது. இந்த தம்பதிக்கு வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளான். இந்த நிலையில், தொழிலதிபர் விசாகனை தற்போது கரம் பிடித்துள்ளார் சௌந்தர்யா. 

எஸ்.எஸ்.வணங்காமுடி:
நாட்டின் முன்னணி மருந்துபொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிது Apex Laboratories Pvt Ltd. கடந்த 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனமானது ’ஸிங்க்’ அடிப்படையிலான ஃபார்முலாக்களை புழக்கத்திற்கு கொண்டு வந்ததில் நாட்டின் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது. 4 தசாப்தங்களாக வெற்றிக்கொடி கட்டி கோலோச்சி வரும் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் விசாகனின் தந்தை எஸ்.எஸ்.வணங்காமுடியும் உள்ளார். 

 

முன்னணி நிறுவனம்:
வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் 50 இந்திய நிறுவனங்களுக்கான பட்டியலில் Apex நிறுவனமும் இடம்பிடித்திருக்கிறது. நாட்டில் உள்ள முன்னணி பிராண்டு லீடர்களில் மிக முக்கியமான இடத்தை தன்வசம் வைத்துள்ளது Apex. கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்த இந்த நிறுவனம் இப்போது ஆண்டொன்றுக்கு ரூ. 500 கோடி வரை வருமானம் ஈட்டி வருகின்றது. இந்த வருமானமானது 2020-ஆம் ஆண்டிற்குள் ரூ. 750 கோடியாக உயர வேண்டும் என்பதே அந்நிறுவனத்தின் தற்போதைய இலக்கு. 

 

மாப்பிள்ளை விசாகன்:
மருந்துபொருட்களை உற்பத்தி செய்வதில் மட்டுமில்லாமல் அவற்றை திறம்பட சந்தைப்படுத்துவதிலும் எஸ்.எஸ்.வணங்காமுடி வல்லவர். ரேடியாலஜி அடிப்படையிலான இந்த நிறுவனத்தின் தற்போதைய தூணாக திகழ்பவர் தான் விசாகன். இங்கிலாந்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்ற விசாகன் தமது தந்தையின் கனவை நனவாக்கும் முயற்சியில் செயல் இயக்குனராக செயலாற்றி வருகிறார். இத்தருணத்தில் தான் சௌந்தர்யாவை திருமணம் செய்துள்ளார் விசாகன். 

 

திரையுலக பிரவேசம்:
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார் விசாகன். குரு சோமசுந்தரம் நடிப்பில், மனோஜ் பீதா இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் உருவான இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் விசாகன் நடித்திருந்தார். ஒருபுறம் தந்தையின் வணிக உலகிலும், மறுபுறம் சினிமா உலகிலும் சிறகடித்து பறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விசாகன் தமது பயணத்தை சௌந்தர்யாவுடன் இனி தொடரவுள்ளார். 

 

விவாகரத்து:
முன்னதாக, பத்திரிகை துறையைச் சேர்ந்த கனிகா என்பவரை திருமணம் செய்திருந்தார் விசாகன். அந்த திருமண பந்தம் கருத்து வேறுபாட்டால் விவாகரத்தில் முடிவடைந்தது. சினிமா தயாரிப்பாளர் வருண் மணியனை கனிகா அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து, சௌந்தர்யாவை தற்போது மணமுடித்துள்ளார் விசாகன். 

 

News Counter: 
100
Loading...

mayakumar