யாருடன் திருமணம்..? மனம் திறந்த விஷால்..!

share on:
Classic

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால்.

மனம் திறந்த விஷால் :

நடிகர் விஷாலுக்கும் ,தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் இருந்த விஷால் தற்போது மனம் திறந்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிடத்தில் தான் திருமணம் :

செய்தியாளர்களை சந்தித்த அவர் "எனக்கும் அனிஷாவிற்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால் இன்னும் நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. இது காதல் திருமணம் அல்ல, இரு குடும்பங்களும் சேர்ந்து முடிவு செய்த திருமணம். நான் முன்பு சொன்னது போல் என் திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடைபெறும். இன்னும் சில மாதங்களில் கட்டிட வேலைகள் முடிந்து விடும்" என்று அவர் கூறியுள்ளார்.

வரலக்ஷ்மியுடன் காதல் முறிவு :

நடிகர் சரத் குமாரின் மகள் வரலட்சுமியும், விஷாலும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக இணைந்து பல விழாக்களுக்கு சென்று வந்தனர். விஷாலின் தந்தை கூட ஒரு முறை "வரலக்ஷ்மி தான் என் வீட்டு மஹாலக்ஷ்மி" என்று கூறியிருந்தார். ஆனால் நடிகர் சங்க மோதல் காரணமாக இரு குடும்பங்களுக்கும் இடையில் தற்போது சுமுக உறவு இல்லை என்பதே அவர்களது பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu