விஷால் - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் ‘துப்பறிவாளன் 2’ படம்..!!

share on:
Classic

விஷால் - மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2 படம் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான படம் தான் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பெற்றிருந்தது.  இந்த படத்தில்  விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். மேலும் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் என பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று முன்பே கூறி வந்தார்கள். தற்போது அதற்கான பணிகள் துவங்கியிருக்கிறது. விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

விஷால் நடித்த ‘அயோக்யா’ படம் வருகிற மே 19-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஷால் இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுதவிர புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமான விஷால் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.  மேலும் மிஷ்கின் - விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் படத்தின் 2ஆம் பாகமாக இந்த படம் உருவாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan