விஸ்வரூபம் - 2 ட்ரைலர் வெளியிடப்பட்டது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புவிஸ்வரூபம் - 2 ட்ரைலர் வெளியிடப்பட்டது

விஸ்வரூபம் - 2 ட்ரைலர் வெளியிடப்பட்டது

விஸ்வரூபம் - 2 ட்ரைலர் வெளியிடப்பட்டது

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கி 2013ம் ஆண்டு வெளியான படம் தான் விஸ்வரூபம். இதில் கமலுடன், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும்  ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தது. பல எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழகத்தில் 2013ம் ஆண்டு  வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2014ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்போது வெளியாகவில்லை. இன்று படத்தின் டிரைலர் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியையும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தியில் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து வெளியடுகின்றனர்.