விஸ்வாசம் படத்தின் ரிவியூ...! ரசிகர்கள் இதுவரை காணாத செம ஜாலி அஜித்

share on:
Classic

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான விஸ்வாசம் படத்தின் ரிவியூ எதிர்பார்ப்புகளை கடந்து நிற்கின்றது. 

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ:
விஸ்வாசம் படம் பார்க்கும் ஆர்வத்தில் அதிகாலை 1:30 மணிக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ காட்சிக்கு திரையரங்கங்கள் நோக்கி படையெடுத்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தின் விளிம்பிற்கு சென்றது ’தல’ படங்களுக்கு கிடைக்கும் மாமூலான ஓப்பனிங்கை காட்டுவதாகவே அமைந்திருந்தது. டிக்கெட் வாங்கிக்கொண்டு திரையரங்கிற்கு உள்ளே சென்ற ரசிகர்கள், ஓப்பனிங் காட்சியில் அஜித் அமர்ந்த பிறகு தான் அவர்களும் இருக்கையில் அமர்கின்றனர். அங்கேயே ஆரம்பித்து விடுகின்றது விஸ்வாசம் அஜித்தின் வெற்றி. 

விஸ்வாசம் ரிவியூ:
அஜித் இதுவரை நடித்துள்ள படங்களில் உச்சரித்த வசனங்களைக் காட்டிலும் விஸ்வாசம் படத்தில் தான் அவர் புதுவிதமான டயலாக் டெலிவரி பாணியை பின்பற்றியுள்ளார். அஜித் இதுபோன்ற பாடி லாங்குவேஜுடன் இதற்கு முந்தைய படங்களில் நடித்ததே இல்லை என திரையரங்கிற்குள் ரசிகர்கள் முனுமுனுத்துக் கொண்டிருந்தனர். ஜாலியாகவும், மற்ற கதாபாத்திரங்களை கலாய்த்தும் அஜித் பேசும் வசனங்கள் வேற லெவல் வரவேற்பைப் பெற்றுள்ளது. அஜித் இப்படியெல்லாம் கலாய்த்து பேசுவாரா? என்று ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு திரையில் அநாயசமாக விளையாடியுள்ளார் அல்ட்டிமேட் ஸ்டார். மறுபுறம், அஜித்திற்கு இணையான நடிப்புத்திறமையும், அழகும் கொண்டு திரையை ஹோல்டு செய்கிறார் நயன்தாரா. 

நகர்ப்புறங்களை மையமாக வைத்து எண்ணற்ற படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் கிராமத்து பின்புலத்தில் திரைக்கதையை உருவாக்கி அசாதாரண முயற்சியை மேற்கொண்டுள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா. படங்களில் ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது இமானின் பின்னணி இசை. 

படத்தின் முதல் பாதி கொஞ்சம் அப்டி இப்டி போய்க்கொண்டிருக்க, இடைவேளை காட்சியில் ஒரு மாஸ் சவாலுடன் வசனங்களை உச்சரிக்கிறார் அஜித். தல ரசிகர்களுக்கு இந்த வசனங்கள் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. மேலும், மழையில் நடைபெறும் ஒரு சண்டைக்காட்சி தான் படத்தின் ஆகச்சிறந்த காட்சியாக பதிவாகி உள்ளது. காலா படத்தில் சூப்பர்ஸ்டார் நடித்திருக்கும் மழை சண்டைக்காட்சிக்கு நிகராக விஸ்வாசம் படத்தில் இக்காட்சி இடம்பெற்றுள்ளது. 

மொத்தத்தில் ஃபேமிலி எண்ட்டர்டெயின்மெண்ட் என்ற சிவாவின் வழக்கமான ஸ்டைல் பட்டியலில் இந்த படமும் இணைந்துள்ளது. இருந்தாலும், சிவா-அஜித் கூட்டணியில் வெளிவந்துள்ள முந்தைய படங்களைக் காட்டிலும் இந்த படத்திற்கு மாஸ் ஓப்பனிங்கே  கிடைத்துள்ளது. மேலும், விவேகம் படத்தில் அஜித்தை மாஸாக காட்ட வேண்டும் என்பதற்காக இயக்குனர் சிவா மேற்கொண்டிருந்த அனைத்து ஓவர்சீன் காட்சிகளுக்கும் இப்படத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தில் சிவா தற்போது வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறலாம். அஜித்தை திரையில் காண வேண்டுமென்ற ஆசையில் காத்திருந்த ரசிகர்களுக்கு விஸ்வாசம் படம் ஒரு நல்ல வேட்டை என்றால் அது மிகையல்ல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய 'கொல மாஸ்' படம் தான் இந்த விஸ்வாசம். 

News Counter: 
100
Loading...

mayakumar