ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்..!

share on:
Classic

நடிகை ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் படம் வெளியாக தடை விதித்தது. இந்நிலையில், விவேக் ஓபராய் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை கிண்டல் செய்யும் வகையில், நடிகை ஐஸ்வர்யாராயின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரித்து மீம் ஒன்றை டுவீட் செய்துள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் ஆட்சேபனைக்குரிய வகையில் டுவீட் செய்த விவேக் ஓபராய் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதே போல, தேசிய மகளிர் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan