சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார் தஹில் ரமணி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார் தஹில் ரமணி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார் தஹில் ரமணி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார் தஹில் ரமணி

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி

கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காலியாக உள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தஹில் ரமணியை நியமித்து உத்தரவிட்டது மத்திய சட்ட அமைச்சகம்.

இதன் அடிப்படையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 10 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். 

1982ல் மகாராஷ்டிர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கிய தஹில் ரமணி மேல்முறையீட்டு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது பெண் தலைமை நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.