வோடபோன் - ஐடியா நிறுவனத்துக்கு, ஜியோ வைத்த ஆப்பு !!

Classic

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் வரையிலான கணக்குப்படி வோடபோன்-ஐடியா கம்பனி சந்தித்த நஷ்டம் ரூ. 5,000 கோடி என்று அந்நிறுவனமே அறிவித்துள்ளது.

கெட்டிக்கார ஜியோ :

டெலிகாம் துறையில் கடந்த 2016-ம் காலடி எடுத்து வைத்தது முகேஷ் அம்பானியின் 'ஜியோ' நிறுவனம். ஒரு வருடத்திற்கு 'டாக்டைம்' மற்றும் 'இன்டர்நெட்' இரண்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜியோ பக்கம் திரும்பி விட்டனர். முதலில் எல்லாம் இலவசம் என்று அறிவித்தாலும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ தன் சேவைகளுக்கு கட்டம் நிர்ணயித்தது. எனினும் எல்லாரும் ஜியோ சிம்களை வைத்திருக்கும் நிலையில் வேறு வழியின்றி மக்களும்  ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

 

எதிர்பார்த்ததை விட குறைவு :

ஜியோவின் வருகை மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியை மொத்தமாக துவம்சம் செய்துவிட்டது என்று கூட சொல்லலாம். வேறு வழியின்றி மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் சேவை தொகையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. ஆனாலும் இழந்ததை மீட்க முடியவில்லை என்பது தான் உண்மை. இதற்கிடையே, லண்டனை தலைமையிடமாகக் கொண்ட வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தன் வணிகத்தை திரும்ப அதிகரிக்க ஐடியா நிறுவனத்துடன் ஜோடி சேர்ந்தது. பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்தபோதிலும் அந்நிறுவனம் தற்போதும் நஷ்டத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 4 மாத இடைவெளியில் மட்டும் ரூ. 5,250 கோடி நஷ்டம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், ரூ. 5,000 கோடி தான் நஷ்டம் என்று பெருமூச்சு விடுகிறது அந்நிறுவனம். இதெல்லாம் ஒரு பக்கம் என்றால் மறு பக்கம் ஜியோ நிறுவனத்தின் பங்குகள் 65 சதவீதம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

sankaravadivu