ஜியோவை சமாளிக்க களத்தில் இறங்கும் வோடபோன் ஐடியா நிறுவனம்

Classic

நெட்வொர்க்கை பலப்படுத்த ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் முடிவை வோடபோன் ஐடியா நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி அதிக லாபத்தை ஈட்டி வருகிறது. இதனால் வோடவோன் ஐடியா நிறுவனம் லாபத்தை ஈட்ட முடியாமல் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும்  குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நெட்வொர்க்கை பலப்படுத்தும் விதமாக அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்நிறுவனம் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

vinoth