6.5 வாடிக்கையாளர்களை இழந்த பிரபல செல்போன் நெட்வொர்க் நிறுவனம் எது தெரியுமா?

share on:
Classic

வோடோபோன் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் மட்டும் 6.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் (COAI)  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே காலக்கட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 100,000 வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ரிலையனஸின் ஜியோ நிறுவனத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

முதலிடத்தில் இருந்த வோடோபோன்

இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் மொத்த வாடிக்கையாளர்களில் வோடோபோ-ஐடியா நிறுவனம் இணைந்து 421.08 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளனர். இதில் வோடோபோன் நிறுவனம் மட்டும் 215.99 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஐடியா நிறுவனம் 205.09 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

இதனால் இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களை கொண்டு வோடோபோன் - ஐடியா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. 314.76 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு ஏர்டெல் நிறுவனம் 2வது இடத்தில் உள்ளது. ஜியோ நிறுவனம் 262.75 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால் மூன்றாவது இடத்தில் உள்ளது.

வாடிக்கையாளர்களை இழந்த வோடோபோன்

Image result for vodafone idea loss

தொடர்ந்து முதலிடத்தில் இருந்த வோடோபோன் - ஐடியா நிறுவனம் கடந்த் 4 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. வோடோபோன் நிறுவனத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து எந்த வாடிக்கையாளரும் இணையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாக இருக்கிறது.

இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின் படி வோடோபோன் நிறுவனம் கடைசியாக ஆகஸ்ட் மாதத்தில் 1.14 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் விவரம் 

Image result for bsnl

இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள இந்த தகவலில் பி.எஸ்.என்.எல்(BSNL), டாடா(TATA), எம்.டி.என்.எல் (MTNL), ஆர்.காம் (RCOM)ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை பற்றிய எந்த விவரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிராய் (Telecom Regulatory Authority of India) வெளியிட்டுள்ள தகவலில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் 113.4 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.டி.என்.எல் ( MTNL) நிறுவனம் 3.48 மில்லியன் வாடிக்கையாளர்கலையும், ஆர்.காம் (R COM)  நிறுவனம் 24,182 பயனாளர்களையும் கொண்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind