வோடஃபோன் ஐடியாவின் அதிரடி திட்டம்...!

share on:
Classic

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் ’இசை ஒளிபரப்பு செயலி’ ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.  

இசை ஒலிபரப்பு சேவைக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ’ஜியோசாவன்’ என்ற செயலியையும், ஏர்டெல் நிறுவனம் ’விங்க் மியூஸிக்’ என்ற செயலியையும் கொண்டுள்ளன. செல்ஃபோன் தளத்தின் வாயிலாக இசை பிரியர்களின் கவனத்தையும் அவர்களது காசையும் ஈர்க்கும் முயற்சியாகவே இந்த 2 செயலிகளும் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக ’இசை ஒலிபரப்பு செயலி’ ஒன்றை  வோடவோன் ஐடியா நிறுவனம் கொண்டு வரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ’ஐடியா மியூஸிக்’ செயலி புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டு புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விங்க் மியூஸிக் செயலியை 100 மில்லியன் யூஸர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், தெற்காசியாவின் முன்னணி பொழுதுபோக்கு செயலியாக ஜியோசாவன் திகழ்கிறது. இந்த 2 மிகப்பெரிய போட்டியாளர்களைக் கடந்து வோடஃபோன் ஐடியா வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

News Counter: 
100
Loading...

mayakumar