4 சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் : ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

share on:
Classic

அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வில்லையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், நீர் நிலைகளை தூர்வாரியது என பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அதிமுக செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya