தேர்தலில் வாக்களித்தார் கவிஞர் வைரமுத்து..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் கவிஞர் வைரமுத்து தனது வாக்கினை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்களிப்பது என்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை, அதுபோன்று யாருக்கு வாக்களிப்போம் என்பது அவரவர் உரிமை. ஆகையால் வாக்காளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றும் போது தங்களுடைய உரிமைகளை மறந்துவிடாதீர்கள் என்றார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan