வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு விவகாரம் : தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கும் எதிர்க்கட்சிகள்

share on:
Classic

வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளன

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையரிடம் கூட்டாக புகார் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 22 கட்சிகள், இன்று தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளன. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து வருவதால், வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind