1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.49% வாக்குப்பதிவு..!!

share on:
Classic

மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.49% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வாக்குப்பதிவு நிலவரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் “ மதியம் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 39.49% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 36.09% வாக்குப்பதிவாகியுள்ளது. 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 42.92% வாக்குகள் பதிவாகின. 384 மின்னணு இயந்திரங்களை மாற்றியுள்ளோம். 692 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டன. 6 மணிக்கு மேலேயும் வரிசையில் நிற்பவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

Ramya