இந்திய அணியின் பந்து வீச்சில் ரன் சேர்க்க முடியாமல் நியூஸிலாந்து அணி திணறல்..!

share on:
Classic

இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரன் சேர்க்க முடியாமல் நியூஸிலாந்து அணி திணறி வருகிறது.

மான்செஸ்டரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் மோதி வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். அணியின் தொடக்கமே நியூஸிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்குமாறு 14 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே சேர்த்து குப்டில் வெளியேறினார். அவரையடுத்து கேன் வில்லியம்சன் களமிறங்கி ஆடி வருகிறார். இந்திய அணியின் பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி ரன் சேர்க்க முடியாமல் திணறி வருகிறது. 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு நியூஸிலாந்து அணி 27 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது 

News Counter: 
100
Loading...

Saravanan