அம்பேத்கர் நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை

share on:
Classic

மதசார்பற்ற ஜனநாயக குடியரசை கட்டமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்று கூட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏரி, குளம், குட்டைகளில் வேண்டுமானால் தாமரை மலரலாம், ஆனால் தமிழக அரசியலில் பாஜக மலர முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் தேசம் காப்போம் மாநாடு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

News Counter: 
100
Loading...

aravind