யாருக்கு வாக்களித்தோம் என்ற குழப்பம் வேண்டாம்...... வந்தாச்சு விவிபிஏடி (VVPAT) இயந்திரம்

share on:
Classic

யாருக்கும் வாக்களித்தோம் என்று தெரிந்து கொள்ள உதவும் இயந்திரம் தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து வாக்கு சாவடியிலும் நாடாளுமன்ற தேர்தலில் விவிபிஏடி (VVPAT)என்று அழைக்ககூடிய யாருக்கு வாக்களித்தோம் என்று தெரிந்து கொள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரச்சார வாகனத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் வாக்காளர் வாக்களிக்கும் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை செயல்முறையும்  தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். இதில் வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களித்த பின்பு அருகே வைக்கப்பட்டு உள்ள விவிபிஏடி இயந்திரத்தில் வெளிச்சம் வரும். அப்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது பிரிண்ட்டான சீட்டு 7 வினாடிகள் தெரியும், பின்பு தானாகவே இயந்திரத்திற்குள் விழுந்து விடும். அந்த சீட்டு வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது வித்தியாசம் இருந்தால் இந்த சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

News Counter: 
100
Loading...

aravind