ஃபிளிப்கார்ட்டை கைவிடும் வால்மார்ட்?... மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை

share on:
Classic

புதிய வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கையால் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து வால்மார்ட் வெளியேறுவது நல்லது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வால்மார்ட் with ஃபிளிப்கார்ட்:
உலக சில்லரை வர்த்தகத்தில் முன்னோடியாக திகழும் வால்மார்ட் நிறுவனம் அண்மையில் இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டை வாங்கியது. வால்மார்ட்டின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து உலகின் அனைத்து மூலைகளிலும் வால்மார்ட் விற்பனை செய்யும் பொருட்கள் மட்டுமே தென்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகள் காரணமாக ஃபிளிப்கார்ட்டை கைவிடும் நிலை வால்மார்ட்டுக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

மார்கன் ஸ்டான்லி-யின் எச்சரிக்கை:
இதுகுறித்து அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி நிறுவனமான மார்கன் ஸ்டான்லி  விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில், இணைய விற்பனை நிறுவனங்களுக்கான இந்திய எஃப்.டி.ஐ விதிகள் வால்மார்ட்டிற்கு முற்றிலும் பொருந்தாத ஒன்று என்றும், இதனை பொருட்படுத்தாமல் வால்மார்ட் தொடர்ந்து வணிகத்தில் ஈடுபட்டால் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மூலமாக நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்தாண்டு அமேசான் நிறுவனத்துடனான கைகோர்ப்பின் போது சீனாவில் என்ன நடந்ததோ அதே நிலைமை இந்தாண்டு இந்தியாவில் வால்மார்ட்டுக்கு நிகழக்கூடும் எனவும் மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது. 

சந்தை மூலதன இழப்பு:
புதிய எஃப்.டி.ஐ. கொள்கையின் படி, ஸ்மார்ட்ஃபோன்கள் உட்பட மின்னணு பொருட்களை  இணையத்தில் மொத்தமாக விற்பனை செய்யும் முறைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இதனால் 25% அளவிற்கு மின்னணு பொருட்களை ஃபிளிப்கார்ட் அதன் இணையதளத்திலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக, அமேசான் நிறுவனம் நாஸ்டாக்கில் ரூ.3.22 லட்சம் கோடி அளவிற்கும், நியூயார்க் பங்குச்சந்தையில் வால்மார்ட் நிறுவனம் ரூ. 36,000 கோடி ரூபாய் அளவிற்கும் சந்தை மூலதனத்தை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar