இந்தியாவில் இன்னும் 7 கடைகள் திறக்கப்படும்...! வால்மார்ட் அறிவிப்பு

share on:
Classic

இந்தியாவிற்குள் இந்தாண்டு 7 கடைகள் திறக்கப்படும் என வால்மார்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. 

உலக சில்லரை வர்த்தகத்தில் ஜாம்பவான் நிறுவனமாக திகழ்வது வால்மார்ட். மேற்கத்திய நாடுகளில் கோலோச்சி வரும் வால்மார்ட் நிறுவனம் நேரடி அன்னிய முதலீடு கொள்கையின் மூலமாக இந்தியாவிலும் தடம் பதிக்க ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடப்பாண்டிற்குள் 5 - 7 கடைகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக வால்மார்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வால்மார்ட் இந்தியாவின் (walmart india) தலைவரும் தலைமை செயலதிகாரியுமான கிரிஷ் ஐயர், 

"இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வால்மார்ட் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். 2020-ஆம் ஆண்டிற்குள் 50 வால்மார்ட் கடைகளை இந்தியாவில் திறக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்படியாக இந்தாண்டு 7 கடைகள் வரை இந்தியாவில் திறக்கவுள்ளோம். நாடு முழுவதும் இப்போது 22 வால்மார்ட் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன” இவ்வாறு கூறினார். 

News Counter: 
100
Loading...

mayakumar