த்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க

share on:
Classic

பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்துல, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருமே பாகுபாடே இல்லாமல் தண்ணீரில் விளையாடுவது ரொம்பவே பிடித்த ஒரு பொழுதுபோக்குதான். 

அதிலும் சுற்றுலா பயணத்தை சாகசமாகவும் த்ரில்லராகவும் அனுபவிக்க சில முக்கிய வாட்டர் தீம் பார்க் குறித்த தகவல்களை காணலாம்...

1) வாட்டர்பாம் பாலி: 

தீவுகளுக்கே பேர்போன ஊர் என்றால் அது இந்தோனேசியா. ஒரு வைல்ட் லைஃபை சொகுசாக வாழ ஏற்ற இடம் இந்தோனேசியாவின் பாலி தீவு. இங்கு ‘வாட்டர்பாம் பாலி’ மிக பிரபலம். இதன் செங்குத்து வளைவு த்ரில் உணர்வை அளிக்கும். இது நண்பர்கள் மட்டுமல்ல குடும்பாக செல்லவும் ஏற்ற இடமே. பளிச்சிடும் நிசப்தமான நீல கடற்கரை உங்களை சூரிய வெளிச்சத்துடனும் ஒரு குளிர்ச்சி மனநிலையுடனும் வரவேற்கும். 

2) பீச் பார்க்:

3 மணிநேரத்திற்கு உலகை மறந்து கவலைகளை மறக்க வைக்கக் கூடியது பிரேசிலில் உள்ள ‘பீச் பார்க்’. இது 14 அடுக்கு வளைவுகளை கொண்டது. துறுதுறுவென உள்ளவர்களுக்கும் அட்வென்ச்சரை விரும்புபவர்களுக்கான சொர்க்கம் இது. இதன் சுற்றுச்சூழலும் செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் பூங்காக்களும் உங்களை மலைப்பில் ஆழ்த்தும்.

3) மக்காடி வாட்டர் வேர்ல்ட்:

எகிப்து என சொன்னாலும் நம் அனைவரின் கண் முன்னே நினைவுக்கு வருவது பிரமிடுகளும், நதிகளும் தான். இங்கு உள்ள வெப்பத்தை தணிக்க வழிவகுக்கிறது ‘மக்காடி வாட்டர் வேர்ல்ட்’. நீண்டகால  கோடை விடுமுறையில் வெயிலினால் ஏற்பட்ட தாகத்தை போக்க ஒரு சிறந்த தீம் பார்க் இதுவாகும். 50க்கும் மேற்பட்ட வாட்டர் ரைட், மிகப்பெரிய நீச்சல் குளம் என நீரினால் ஆன அம்சங்கள் இங்கு உள்ளது.

4) அஃவாடிக்கா:

ஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோவில் உள்ளது இந்த அஃவாடிக்கா தீம் பார்க். ஏகப்பட்ட திகில் அனுபவங்களை ஏற்படுத்தும் அளவுக்கு 40க்கும் மேற்பட்ட வாட்டர் ஸ்லைடுகளை உள்ளடக்கியது. 84,000 சதுர அடி கொண்டுள்ள இந்த அஃவாடிக்காவில் கடற்கரை, நதிகள், ஆறுகள் என உருவாக்கப்பட்டுள்ளது. விலக்கு காட்சிகளும் உள்ளது.

News Counter: 
100
Loading...

janani