இளமையாக இருக்க வேண்டுமா..?ஆரஞ்சு பழச்சாறு குடிங்க...!!

share on:
Classic

இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். தற்போது சிறுவயதிலேயே பெரியவர்கள் போல் தோற்றம்,உடலில் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் இன்றைய உணவு முறைகள் தான். அதாவது இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே காரணம். அந்த வகையில் உடலில் ஏற்படும் முதிர்ச்சி தோற்றத்தை சரி செய்ய ஆரஞ்சு பழச்சாறு சிறந்த வழி. 

ஆரஞ்சு பழச்சாற்றின் நன்மைகள் : 

  • ஆரஞ்சு பழச்சாற்றை சாப்பிடுவதால் இரத்தத்தில் பித்த நீரின் அளவு குறைகிறது. 
  • ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்
  • ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.
  • ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷத்தை உடனே குணமாக்கும்
  • ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். எனவே இளமையுடன் வாழ ஆரஞ்சு பழச்சாறு மிகவும் அவசியம்.
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan