தேடப்பட்டு வந்த ஜெயிஷ் இ தீவிரவாதி ஸ்ரீ நகரில் கைது..

share on:
Classic

ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த தேடப்பட்டு வந்த அப்துல் மஜீத் பாபா என்ற தீவிரவாதி டெல்லி சிறப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

ஜம்மு காஷ்மீரின் சோபூர் மாவட்டத்தில் உள்ள மக்ரேபோரா பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா என்ற நபர் 2007-ல் டெல்லியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவர் ஆவார். டெல்லி போலீஸுக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் தப்பியோடிவிட்டனர். பின்னர் அப்துல் மஜீத்துடன் தொடர்புடைய அகமது சஜத் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து அப்துல் மஜிதை டெல்லி சிறப்பு போலீசார் தீவிரவாக தேடி வந்தனர். அவரை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரை ஸ்ரீ நகரில் டெல்லி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளனர். தலைமை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், விசாரணைக்கு டெல்லி கொண்டுசெல்லப்படுகிறார். 

News Counter: 
100
Loading...

Ramya