"போனா எரிமலைக்கு தான் போவோம்"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..!

Classic

'எதிலும்  ஒரு த்ரில் வேண்டும்' என்று எதிர்பார்க்கும் பலர், எரிமலைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர் என்று ஐ .நா வின் ராயல் புவியியல் மையம் அறிவித்துள்ளது.

அதிலும் ஆபத்துகள் நிறைந்த, வெடித்து சிதறும் எரிமலைகள் தான் இவர்களது டார்கெட். தற்போது வெடித்து தீ பிழம்புகளை வெளியேற்றி கொண்டிருக்கும் 'ஐஸ்லாண்ட்' எரிமலைக்கும் பலர் சுற்றுலா செல்கின்றனர் .'valcanophiles' என்று சொல்லக்கூடிய இந்த எரிமலை சுற்றுலா பிரபலமடைந்து வரும் நிலையில் ,இதிலிருக்கும் ஆபத்துகள் குறித்து பலரும் புரிந்துகொள்வதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

"எரிமலைகளில் இருந்து வெளிப்படும் 'லார்வா' நெருப்பு குழம்பு மற்றும் விஷ வாயுக்களால் உயிருக்கே ஆபத்து நேரிடும். நொடி பொழுதில் வெடித்துச்சிதற கூடிய இந்த எரிமலைகள் மிகுந்த ஆபத்து நிறைந்தவைகள்" என்று கூறியுள்ளது. இவை எதை பற்றியும்  சிறிதும் கவலைபடாத த்ரில்வாசிகள் "போனா எரிமலைக்கு தான் போவோம்" என்று ஆடம் பிடித்த வண்ணம் உள்ளனர். 

News Counter: 
100
Loading...

youtube