தண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..?

share on:
Classic

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பால் நிறத்தில் வரும் தண்ணீரை பல மணி நேரம் காத்திருந்து அப்பகுதி மக்கள் பிடித்து செல்கின்றனர்.

கோவில்பட்டியில் உள்ள விளாத்திகுளம் தாலுகாவில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், கண்மாய்களில் ஊற்றுத் தோண்டி காத்திருந்து தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். ஒரு குடம் நிரம்ப சுமார் 45 நிமிடங்கள் ஆவதால், கதவு எண் மற்றும் குடும்பத் தலைவரின் பெயர் வரிசை முறையில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.  மேலும், குடிநீர், சமையலுக்காக நல்ல தண்ணீரை 5 முதல் 10 ரூபாய் வரை காசு கொடுத்து வாங்குவதாகவும், 250 ரூபாய் கூலியில் 100 ரூபாய் தண்ணீருக்கே செலவாகிவிடுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

News Counter: 
100
Loading...

vinoth