மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி 

Classic

அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு அணையில் தற்போது நீர் மட்டம் 73 அடியாக உள்ளது. இதனையடுத்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தண்ணீர் திறந்து வைத்தார். இதன் மூலம், அம்பாசமுத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட அயன்சிங்கம்பட்டி,ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட 6 கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்து  756 புள்ளி 62 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

News Counter: 
100

sankaravadivu