தண்ணீர் பஞ்சம் என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பொய் : மத்திய நீர்வள அமைச்சர் கருத்து..

share on:
Classic

நாடு முழுவதும் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், குடிநீர் பஞ்சம் என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பொய் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர ஷேக்வாத் நேற்று டெல்லியில் பல்வேறு மாநில அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தண்ணீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தண்ணீர் தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் உத்திரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பில் உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தண்ணீர் பஞ்சம் குறித்த பயத்தை ஊடகத்தினரே உருவாக்கியதாகவும் கூறினார்.

இதனிடையே கடந்த மாதம் 18-ம் தேதி மத்திய நீர் ஆணையம் வறட்சி தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்தவும் அறிவுறுத்தியது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், நாட்டில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்ற மத்திய அமைச்சரின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya